search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள் தேர்தல்"

    • மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
    • ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 2-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

    மனுக்களை திரும்ப பெற 2-ந்தேதி கடைசி நாள். 3-ந்தேதி இரவு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 14-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தகவலை தேர்தல் ஆணையரும், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான முருகேசன், உதவி தேர்தல் ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • சிவகங்கை அருகே பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல் நடத்தக்கோரி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
    • பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அடுத்த மதகுபட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு அபூபக்கர் சித்திக் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வாசலில் நிர்வாகிகள் தேர்வு என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்து தாங்கள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

    இந்த பள்ளிவாசல்நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஜமாத்தார்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தமிழ்நாடு வக் வாரியம் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தியும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யாமல் உள்ளனர்.

    எனவே உடனடியாக நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வாசல் முன்பு உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் திரளான நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர்.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்கள் தி.மு.க. நிா்வாகத்துக்காக 28 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்கள் தி.மு.க. நிா்வாகத்துக்காக 28 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அதற்கான செயலாளர் மற்றும் நிா்வாகிகள் தோ்தலுக்காக விருப்பமனுக்கள் பாரதிநகா், பட்டினம்காத்தான் பகுதிகளில் உள்ள இரு விடுதிகளில் பெறப்பட்டன.

    தோ்தல் ஆணையாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் ராமசாமி மனுக்களை பெற்றுக் கொண்டாா். அவரிடம் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், அவைத்தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான மனுக்களை அளித்தனா்.

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த முட்டுக்கட்டை போட முயற்சித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அந்த பதவியில் இருந்து நீக்கி கடந்த 2017-ம் அண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

    லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கவனிக்க நிர்வாக கமிட்டி உறுப்பினர்களையும் கோர்ட்டு பின்னர் அறிவித்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக பணிகளை 3 பேர் கொண்ட கமிட்டி கவனித்து வருகிறது.

    இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டு இருக்கும் வக்கீல் நரசிம்மாவுடன், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களான வினோத் ராய், டயானா எடுல்ஜி, ரவி தோட்ஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்று நிர்வாக கமிட்டி நேற்று அறிவித்தது. மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை செப்டம்பர் 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும் போது, ‘நான் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டேன். எனது பணி இரவு வாட்ச்மேன் போன்றது என்று நான் சொல்லி வந்தேன். ஆனால் இந்த இரவு வாட்ச்மேன் பணி நீண்ட காலம் நீடித்து விட்டது. எங்கள் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. லோதா கமிட்டி சிபாரிசுகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதில் இருந்த சில பிரச்சினைகளை கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் பல முறை மாநில சங்கத்தினரிடம் பேசி பிரச்சினையை சரி செய்தது மகிழ்ச்சிக்குரியது. புதிதாக தேர்வு செய்யப்படும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.
    ×